திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற ஒருவர், அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அலுவலர்களை பார்க்க சென்றார்.
பின்னர் அவர் திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அதில் பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை பிரித்து, அங்கு மறைந்திருந்த சிறிய பாம்பு குட்டியை பிடித்து வனத்துறையின ஒப்படைத்தினர்.