தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளி ஒருவர் சாப்பாடு செய்து வைத்திருந்த பாத்திரத்தின் மீது கால் வைத்து படுத்து தூங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த காவலாளியை பணியிலிருந்து நீக்க ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவம் வஸதிகூட உணவுப் பாதுகாப்பும் பணியாளர்களின் நடத்தை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
