ராஜஸ்தானில் மதிய உணவு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்

ராஜஸ்தானில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில், மாணவர்களுக்குத் தேவையான சத்தான உணவுகளை வழங்குவதற்காக ‘காம்போ பேக்’ வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை அம்மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் பல அடுக்குகளாக மோசடிகள் நடந்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு, எண்ணெய், மசாலாப் பொருட்கள் போன்றவை FSSAI மற்றும் Agmark தரக் கட்டுப்பாடு இல்லாத தரம் குறைந்த பொருட்கள் அதிக விலைக்குக் கணக்கு காட்டப்பட்டுள்ளன.

உணவு பொருட்களைமிகக் குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, மிக அதிக விலைக்கு வாங்கியதாகப் போலி பில்கள் தயாரித்து அரசுப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுகளின் தரத்தை குறைத்தும், போலி பில்கள் மூலம் கணக்குக் காட்டியும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளக்கு ஊழல் நடந்துள்ளது கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தில் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Related News

Latest News