Sunday, January 25, 2026

ஜனநாயகன் இடைவேளையில் பிரபல நடிகரின் ப்ரோமோ? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இது இருக்குமெனக் கூறப்படுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், ‘சூர்யா 47’ திரைப்படத்தின் ப்ரோமோவை ஜனநாயகன் திரைப்படத்தின் இடைவேளையில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சூர்யா 47 திரைப்படத்தின் ப்ரோமோ தற்போது தயாராகி வருகின்றது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ப்ரோமோ தயாராகிவிடுமாம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை,. அப்படி ஜனநாயகன் இடைவேளையில் ‘சூர்யா 47’ திரைப்படத்தின் ப்ரோமோ ஒளிப்பரப்பப்பட்டால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும்.

Related News

Latest News