Thursday, December 25, 2025

மொபைல் பார்ப்பதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நிவேதா (17 வயது) என்ற மாணவி காடையாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகை அன்று மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி, வீட்டில் இருந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News