ராஜஸ்தானில் சாலையில் நடந்து சென்ற நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பத்ரு நகரை சேர்ந்த 45 வயதான தையல்காரர் அசோக்குமார் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அசோக்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
