ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா (16) என்ற மாணவன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 9-ம் வகுப்பு படித்து வந்த போது, நண்பர்கள் “பேனாவை விழுங்கினால் ரூ.50 தருவோம்” என்று பந்தயம் வைத்தனர். அந்த பந்தயத்திற்காக முரளி கிருஷ்ணா ஒரு பேனாவை விழுங்கினார். அதிலிருந்து அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கிய சம்பவத்தை அவரது நண்பர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் பெருங்குடலில் இருந்த பேனாவை வெற்றிகரமாக அகற்றினர். இதனால் முரளி கிருஷ்ணாவின் பெற்றோர் மிகுந்த நிம்மதி அடைந்தனர்.
