Wednesday, January 7, 2026

துருவ நட்சத்திரம் படம் குறித்து வெளியான புது அப்டேட்

நடிகர் விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நிதி சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தடைபட்டது. இருப்பினும், அனைத்து தடைகளையும் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்த பின்னரும், படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. பலமுறை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்பட்ட தேதிகளில் படத்தை வெளியிட படக்குழுவிற்கு முடியாமல் போனது.

இந்த நிலையில், தற்போது ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related News

Latest News