வங்கக்கடலில் நாளை (22-11-2025) புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்-கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
