Wednesday, February 4, 2026

அறிமுகமானது புது iQOO 5ஜி போன், 7400mAh பேட்டரி.. எந்த மாடல்னு தெரியுமா?

ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) மாடலை இன்று சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆக்டிவ் கூலிங் ஃபேன், 50 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்ட பல முன்னணி அம்சங்களுடன் இந்த போன் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புதிய ஐக்யூ 15 அல்ட்ரா போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.

ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.85 இன்ச் 2K+ கர்வ்டு சாம்சங் M14 8T LTPO AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1.07 பில்லியன் நிறங்கள், 8000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் ஆதரவு போன்ற உயர்தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக வேகம் மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் Adreno 840 GPU கிராபிக்ஸ் கார்டும், Q3 கேமிங் சிப் ஆதரவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்யூ 15 அல்ட்ரா, OriginOS 6.0 அடிப்படையிலான Android 16 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த போனுக்கு தொடர்ந்து ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா அம்சங்களைப் பார்க்கும் போது, 50 மெகாபிக்சல் Sony IMX921 மெயின் சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றுடன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளுக்காக 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், USB Type-C ஆடியோ, Hi-Fi ஆடியோ போன்ற பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் 7400mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும், அதிக வெப்பத்தை கட்டுப்படுத்த Dome Cooling System ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் IP68 மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்காக 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 be, Bluetooth 6.0, GLONASS, Galileo உள்ளிட்ட பல ஆதரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்யூ 15 அல்ட்ரா விலை விவரங்கள்:

  • 16GB ரேம் + 256GB மெமரி மாடல் – 5,699 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.74,290)
  • 16GB ரேம் + 512GB மெமரி மாடல் – 5,999 யுவான் (சுமார் ரூ.78,220)
  • 16GB ரேம் + 1TB மெமரி மாடல் – 6,999 யுவான் (சுமார் ரூ.91,235)
  • 24GB ரேம் + 1TB மெமரி மாடல் – 7,699 யுவான் (சுமார் ரூ.1,00,370)

இந்த ஐக்யூ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News