காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டத்தை செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், காந்தி மீது பாஜகவினருக்கு எவ்வளவு வெறுப்பு, காழ்ப்புணர்வு என்பதை 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தி பெயரை அழிக்க துணிந்துவிட்டார்கள் என்றால் இந்தியாவின் பெயரை அழிக்க துணிந்துவிட்டனர் என்றுதான் அர்த்தம் என்று கூறியுள்ள ப.சிதம்பரம், இந்திய வரலாறு 2014-ல் தான் தொடங்கியது என பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தென்னாட்டைப் பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காந்தி பெயர், நினைவை அழித்து விட்டு யாரை தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் என்பதை உங்கள் கற்பனைக்கு என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
