Saturday, December 21, 2024

நிரந்தரப் புன்னகையுடன் பிறந்த அதிசயக் குழந்தை

https://www.instagram.com/p/CcrueIxrQ5S/?utm_source=ig_web_copy_link

நிரந்தரப் புன்னகையுடன் பிறந்த அதிசயக் குழந்தை
இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெற்கு ஆஸ்திரேலியப் பெற்றோரான கிறிஸ்டினா
வெர்ச்சர்- பிளேஸ் முச்சா தம்பதிக்கு சமீபத்தில் ஒரு
பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியில்
ஆழ்ந்தனர். ஆனால், அந்தக் குழந்தையின் நிலைகண்டு
சோகத்தில் ஆழ்ந்தனர்.

காரணம் நிரந்தரப் புன்னகையுடன் அந்தக் குழந்தை
பிறந்ததுதான்.அரிதான மரபணுக் கோளாறால் குழந்தை
இப்படிப் பிறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேக்ரோஸ்டோமியா என்று மருத்துவர்கள் அதைக்
குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் இந்தக் குறைபாட்டால் 14பேர்
மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சில மருத்துவர்கள் அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை
செய்துகொள்ள யோசனை கூறியுள்ளனர்.

ஆரம்பத்தில் தங்கள் மகளின் நிலைகண்டு வருத்தமுற்ற பெற்றோர்,
தற்போது அந்தக் குழந்தையின் பெயரில் டிக்டாக் கணக்கு ஒன்றைத்
தொடங்கி அழகுக் கோளாறுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகின்றனர்.

Latest news