Friday, July 18, 2025

90ஸ் கிட்ஸால் மறக்கமுடியாத ஜண்டா நடிகர், அவருக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத வசனம் ‘ஜண்டா’. சாமி படமாக ரசிகர்கள் கொண்டாடிய அம்மன் படத்தில் அதன் வில்லன் உச்சரிக்கும் வார்த்தையே இது. 1990ல் வெளிவந்த இந்தப் படம் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் எப்படி ‘ஜண்டா’ என்ற ஒற்றை வார்த்தை மூலம் ரசிகர்களை ஈர்த்தாரோ, அதேபோல் அனுக்சம் இவர் பேசிய ‘ஸ்பாட் பெடதா’ என்கிற வசனம் இவரை பிரபலமாக்கியது. இவருடைய உண்மையான பெயர் ராமி ரெட்டி.

1959ல் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் முடித்த இவர், அந்நகரிலேயே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ப்ரொபஸராக பணியாற்றி வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. அதற்காக தனது ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.

தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார் ராமி ரெட்டி. எனினும், தெலுங்கு சினிமாவிலேயே அதிக கவனம் செலுத்தினார். நடிகராக இருந்தபோது சொந்த காசைப்போட்டு படம் தயாரித்தார் ராமி ரெட்டி. ஆனால், அவர் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவியது.

இதனால் கவலையில் ஆழ்ந்த அவருக்கு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டது. பண கஷ்டத்தில் இருந்த ராமி ரெட்டி உடலில் கல்லீரல் பிரச்சனையும் வந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news