புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
