சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் வி.சி.பாண்டியன் (60). இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த கிராமத்தில் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யும் பணிகளை முன் நின்று செய்து, துக்கத்திலுள்ள குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வந்தார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் ஏராளமான உடல்களை அடக்கம் செய்து கிராம மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் வி.சி.பாண்டியன் நேற்று (செவ்வாய் கிழமை) மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து, இவரது இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யும் செலவுகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
