விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் அருகே நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக தவெக தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பினார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியுள்ளார். அந்த நபரை அங்கிருந்த காவலாளிகள் வெளியேற்றினர். செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.