கையில் வாளை ஏந்தி சுற்றி திரிந்த நபரை நடுரோட்டில் போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அரங்கேறியுள்ளது.
36 வயதான குர்ப்ரீத் சிங் என்ற அந்த நபர் சம்பவத்தின் போது கையில் வாளை ஏந்தியபடி நடுரோட்டில் நின்று வித்தைகளை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த குர்ப்ரீத் தனது காரில் ஏறி தப்பிக்க முயன்று தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.
இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது குர்ப்ரீத் கையில் வாளை ஏந்தியபடி போலீசாரை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளார். இதனால், காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் குர்ப்ரீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.