சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்த நபர்., எப்படி தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிவைக் கண்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் பழைய மற்றும் பயன்பாடின்றி தூக்கி எறியப்படும் பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கியாவோ என்ற நபர், பழைய சிம் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு கழிவுகளில் இருந்து தங்கத்தை எடுக்கும் முறையை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அவர் பழைய சிம் கார்டுகள் உள்ளிட்ட மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Related News

Latest News