மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய மாற்றம்? 8வது ஊதியக் குழு முக்கிய தகவல்…

8வது ஊதியக் குழு, நாடு தழுவிய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களுடன் முக்கிய நகரங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது.

இதன்படி ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளிலும், சென்னையில் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும், புதுச்சேரியில் செப்டம்பர் 9-ம் தேதியும் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மேலும், சண்டிகரில் செப்டம்பர் 16 முதல் 18 வரையும், பெங்களூருவில் அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழல் தொடர்பான தகவல்களை சேகரிக்க மும்பையில் உள்ள மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் செயல்படும் ரயில்வே கோட்டங்களையும் ஆணையம் பார்வையிட திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டங்களில் சம்பளம், படிகள், ஓய்வூதியம், குறைந்தபட்ச ஊதியம், பணிச்சூழல் மற்றும் பிற பணி நிபந்தனைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட உள்ளன.

குறிப்பாக, 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57-ல் இருந்து 3.83 அல்லது 4.0 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர் சங்கங்களிடையே உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கும் என ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related News

Latest News