Tuesday, July 29, 2025

5 வருடத்தில் லாபத்தை கொட்டிக்கொடுக்கும் ஜாக்பாட் திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

சமீப நாட்களில் பணத்தை சேமிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆபத்தில்லாத வகையில் தங்கள் மாத வருமானத்தில் ஒரு பகுதியையோ அல்லது வர்த்தக ரீதியிலான லாபத்தையோ முதலீடாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பின்னாட்களில் அது அவசர நேரங்களில் மற்றவர்களின் கையை எதிர்ப்பார்த்து நிற்காமல் இருக்க உதவியாக இருக்கும்.

மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பாலும் அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் அதிக அளவு இணைகின்றனர்.  இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.  அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் அதிக அளவு வட்டி தொகையை பெற முடிகிறது என்பதால் பலரும் அவற்றை தேர்வு செய்கின்றனர். அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அதாவது SCSS முக்கிய பங்கு வகிக்கிறது.

மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் அதிக வருமானத்தைப் பெற முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்பது Plus Point. அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை ஒரு அக்கவுண்டில் சேமிக்கலாம்.

5 வருட முதிர்ச்சிக்கு பிறகு இந்தக் கணக்கை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ள முடியும். சேமித்த பணத்தை மாதம் ரூ.20,050 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ.60,150 பெற்றுக்கொள்ளலாம். அதை பெறாமல் தவிர்க்கும் பட்சத்தில் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12 லட்சம் வட்டி கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News