Friday, December 27, 2024

திடீரென பச்சை நிறமாக மாறிய பிரம்மாண்ட கால்வாய்! அச்சத்தில் உறைந்த மக்கள்…

சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமியாக திகழும் இத்தாலிய நாட்டின் முக்கிய நகரம் வெனிஸ்.

அதிலும், சான் மார்கோ பசிலிக்கா முதல் சாண்டா சியாரா தேவாலயம் வரை உள்ள அழகிய வண்ண நகரை இரண்டாகப் பிரிக்கும் ‘கிராண்ட் கால்வாய்’ நீர் வழிப்பாதை வெனிஸில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். கடந்த வாரம் முதல் பச்சையாக மாறி வரும் Grand கால்வாயின் நீர், தீவிர பச்சையாக மாறியுள்ளது.

முன்னதாக, பாசி அல்லது நீர் வாழ் உயிரிகளால் ஏற்படும் விளைவாக இருக்கக் கூடும் எனக் கருதிய நிலையில், தற்போது நிலைமை கைமீறி செல்வதால் உடனடியாக விசாரணை செய்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என வெனிஸ் போலீசாருக்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். இதையடுத்து, வெனிஸ் காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெனிஸ் கால்வாய் பச்சை நிறமாக மாறுவது இது முதல் முறையல்ல. 1968ஆம் ஆண்டு அர்ஜென்ட்டினாவை சேர்ந்த நிக்கோலஸ் கார்சியா உரிபுரு என்ற கலைஞர், வெனிஸ் கால்வாயை ஒளிரக் கூடிய பச்சை சாயத்தால் பச்சையாக்கினார். அப்போது, வெனிஸில் நடந்த கலாச்சார விழாவை முன்னிட்டு சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த நிக்கோலஸ் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Latest news