நாளை மாபெரும் இணைப்பு விழா… த.வெ.க.வில் இணையும் முக்கிய தலைவர்கள்..

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) நாளை அதிகாரப்பூர்வமாக இணைய இருப்பதாக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பொதுவாழ்வு பயணத்தில் இது ஒரு புதிய திருப்பமாக அமையும் என்றும், அரசியல் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் புதிய தொடக்கமாக த.வெ.க.வில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதலுடன் புதிய உற்சாகத்துடனும், மக்களுக்கான சேவையை தொடர்ந்து முன்னெடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

த.வெ.க.வில் புதிய உறுப்பினர்களை வரவேற்கும் மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கட்சியில் இணைகின்றனர்.

முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

அதேபோல், விராலிமலை தொகுதி முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் தொகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளைய இணைப்பு விழாவில் த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளனர்.

Related News

Latest News