Monday, January 19, 2026

மதுரையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் மதுரையில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக டயர் வெடித்ததில் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த பேருந்தில் 55 பயணிகள் பயணித்தனர். ஏதும் உயிர் சேதம் இன்றி பயணிகள் தப்பிய நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பத்து பேர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மட்டும் பொதுமக்கள் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த பேருந்து உள்ள பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்து முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் இந்த விபத்து குறித்து சமயநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News