சென்னை பூந்தமல்லியில் இருந்து பழுதான பேருந்து ஒன்றை சீர்படுத்துவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி ஓட்டுனர் இயக்கியுள்ளார். கோயம்பேடு மெட்ரோ ரயில் பாலத்தின் கீழே பேருந்தை திருப்பும்போது திடீரென ஓட்டுனருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறி கேட்டு ஓடியது. இருப்பினும் சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து அங்கே பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சாலையில் மோதி நின்ற அரசு பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பரபரப்பான கோயம்பேடு சாலையில் திடீரென அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியது
