Wednesday, July 30, 2025

பழுதாகி நின்ற அரசு பேருந்து.., நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 52 பயணிகள் இருந்தனர். பேருந்து விழுப்புரம் வழியாக சென்றுகொண்டு இருந்த போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் திடீர் என பழுதாகி நின்றது.

இதையடுத்து அந்த பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு வேறு ஒரு பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின் சுங்கச்சாவடி ஊழியர்களை கொண்டு பேருந்தை அங்கிருந்து அப்புறபடுத்தினர்.

தினம்தோறும் அரசு பேருந்துகள் பழுதாகி நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திருக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News