Wednesday, December 17, 2025

மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம்., அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழைகுறைந்து காணப்படும் நிலையில்

இன்று காலையிலிருந்து லேசான காற்று வீசி வந்த நிலையில் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் பெருமாள் மலைப் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ராட்சதர மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதன் காரணமாக மலை சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கப்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News

Latest News