கோஸ்ட ரீக்கா விலங்கியல் பூங்காவில் ஆண் முதலையின் உதவியின்றி பெண் முதலை முட்டையிட்டுள்ளமை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைனோசரஸ் உயிரினங்களுக்குப் பிறகு, பெண் முதலை தானே ஆண் விலங்கியின் உதவியின்றி முட்டையிட்டுள்ளமை தொடர்பாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் ஆரம்பித்துள்ளனர்.
ஆண் உயிரினத்துடன் பாலியல் ரீதியாக இணையாது கர்ப்பமாகும் முறைக்கு மருத்துவத்துறையில் Faculttative Parthenogenesis எனக்கூறப்படுகிறது.இந்த முறையில் சில பறவைகள், பல்லி மற்றும் பாம்புகள் கருவுற்று புதிய உயிரினங்களை தோற்றுவிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த உயிரினங்களில் போது அளவு பாலியல் குரோமோசோம்கள் எனவும் அவற்றின் பாலியல் தேவைகள் உடல் வெப்பத்தினால்,கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் ஊடாக அவை முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கருவுற்ற முதலை கோஸ்ட ரீக்கா விலங்கியல் பூங்காவில் கடந்த 16 ஆண்டுகளாக தனித்து வைக்கப்பட்ட நிலையில் கருவுற்றதை அடுத்து இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆண் உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை தொடர்பான முதல் சான்று இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.