Monday, January 12, 2026

உணவு சமைக்காததால் ஆத்திரம்., தந்தை செய்த விபரீத செயல்

விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர், கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி மது போதையில் வீட்டிற்கு சென்று தனது இரண்டாவது மகள் வைஷ்னவியிடம் உணவு கேட்டுள்ளார்.

அப்போது உணவு சமைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து பாபு தனது மகளிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கடத்தில் மகளின் தலையை முடியை பிடித்து சுவற்றில் இடித்ததில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து வைஷ்ணவியை மீட்டு தாயார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து பாபுவை விழுப்புரம் தாலுக்கா போலீசார் கைது செய்து வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News