தமிழில் தெகிடி, சேதுபதி உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. இவரின் இசையில் வெளியான ‘கும்கி 2’ படத்தின் பாடல்களும் சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ படத்திற்கும் இவர் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நிவாஸ் கே பிரசன்னா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். ‘ஜடா’ திரைப்படத்தை இயக்கிய குமரன் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் நிவாஸுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளது.
