Thursday, August 7, 2025
HTML tutorial

FD முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கி

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இது வங்கி வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு தரப்பான முதலீட்டாளர்களுக்கு அது புதிய கவலையை உருவாக்கியுள்ளது.

ரெப்போ வட்டி குறைவால் வங்கிகள் வீட்டு கடன், வாகனக் கடன் போன்றவை குறைந்த வட்டியில் வழங்கத் தயாராகின்றன. இதனால் கடன் பெற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில், வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் வழங்கும் வட்டி விகிதங்களையும் குறைக்கத் தொடங்கியுள்ளன.

இதன் தாக்கமாக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த வருமானம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிஐசிஐ வங்கி தனது FD வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 10 முதல் அமலில் வந்துள்ளன. மேலும், இது ₹3 கோடி வரை மட்டுமே வைப்புத்தொகை உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்து வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைக் குறைத்துவிடும் என்பதால் அந்தக் கவலையில் முதலீட்டாளர்கள் இருக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News