‘தி லயன் கிங்’ கார்ட்டூன் படத்தில் இளம் ‘நாலா’ கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து பிரபலமான நடிகை இமானி ஸ்மித் (25) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1990-ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் மிகவும் விரும்பிய கார்ட்டூன் படங்களில் ஒன்றாக ‘தி லயன் கிங்’ இருந்தது. இந்த தொடரில் 2011 முதல் வெளியான படங்களில், இளம் நாலா என்ற கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் இமானி ஸ்மித் பிரபலமானார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் வசித்து வந்த இமானி ஸ்மித், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இமானி ஸ்மித்தின் ஆண் நண்பர் ஜோர்டன் டி. ஜேக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
