தென்காசி மாவட்டம் மேலகரத்தில், போதை ஆசாமி ஒருவர் Post Box பிடித்தவாறு தெரு தெருவாக சுத்தி வந்து ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், ஒரு வழியாக அவரிடமிருந்து Post Box-ஐ மீட்டனர்.
விசாரணையில் அவர் நன்னகரம் பகுதியை சேர்ந்த முத்து என்பதும், போதை பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது.