‘மின்னல் வேகத்துல மரண அடி விழும்!’ அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் ஓபன் சேலஞ்ச்!

ஈரானின் புதிய ‘சுப்ரீம் லீடர்’ முஜ்தபா கமேனியை பிப்ரவரி மாதம் பதவியேற்றதில் இருந்து இதுவரை யாரும் நேரில் பார்த்ததே இல்லை. ஆனால், “நான் அடிக்கிற அடியை மட்டும் பாரு” என்பது போல, திடீரென தனது ராணுவத் தளபதிக்கு ஒரு புதிய மாஸ்டர் பிளானை ரகசியமாக எழுதிக் கொடுத்து ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அவர் அதிர வைத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே அந்த ரகசிய உத்தரவாகும். இந்த உத்தரவைப் பெற்ற ஈரான் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி, அமெரிக்கா ஏதாவது தவறு செய்தால், எங்களோட பதிலடி மின்னல் வேகத்தில் மரண அடியாக இருக்கும் என செம கெத்தாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபக்கம் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும், வளைகுடா நாடுகளில் வெடிக்கும் சரவெடிகளைப் பார்த்தால் நிலைமை விபரீதமாகப் போவது நன்றாகவே தெரிகிறது. நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் வான்பரப்பில் ஈரானில் இருந்து ஏவப்பட்ட மர்ம ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இது பத்தாது என்று, கத்தார் நாட்டு கடல் எல்லையில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற ஒரு சரக்குக் கப்பல் மீதும் அடையாளம் தெரியாத ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், இப்படி நடுக்கடலில் அமெரிக்கக் கப்பலுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை எகிற வைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுப்ரீம் லீடர் கமேனிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால்தான் அவர் பதுங்கியிருக்கிறார் என ஒருபுறம் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், முகம் காட்டாத ‘கோஸ்ட் பாஸ்’ ஆக இருந்து கொண்டு அவர் பிறப்பித்துள்ள இந்த புதிய ராணுவ உத்தரவு, அமெரிக்காவைத் திருப்பி அடிக்க ஈரான் தயாராகிவிட்டதையே காட்டுகிறது. “தலைவர் எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியல..

ஆனா ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு” என்பது போல அமைந்துள்ள ஈரானின் இந்த அதிரடி அரசியல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

Related News

Latest News