Saturday, December 20, 2025

கூலி தொழிலாளி சுடலை வெட்டி படுகொலை!! கண்ணீர் மல்க மனைவி பேட்டி… நடந்தது என்ன??

சாத்தான்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை (25). இவர் பந்தல் அமைக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலையில் வேறு ஒரு தகராறு தொடர்பாக தகராறில் ஈடுபட வந்தவர்களை சுடலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காலையில் தகராறு ஈடுபட வந்தவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். மீண்டும் அதே பகுதிக்கு வந்த அவர்கள் அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலையை அறிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.

அதைப்பார்த்த சுடலை அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்று சுடலையை வழிமறித்து கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுடலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அங்கு கூடிய சுடலையின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சாத்தான்குளம் பொறுப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுடலையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுடலை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவத்தில் சுந்தர், ஜெகதீஷ் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் உறவினர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு..

கைது செய்யப்பட்ட இருவரை தவிர பார் முதலாளி செல்வகுமார் மற்றும் அருணாச்சலம் இருவரை கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட சுந்தர் ,ஜெகதீஷ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் இன்று காலை முதலே காந்திநகர் மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் திரண்டு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சுடலை மனைவிக்கு அரசு வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் புதிய வீடு கட்டி கொடுக்க வேண்டும் அந்தப் பகுதியை முழுமையாக சிசிடிவி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக நிவாரணமாக ஆறு லட்ச ரூபாயை சுடலை மனைவி ராமலட்சுமி இடம் கோட்டாட்சியர் கௌதம் வழங்கினார் இதில் சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

பின்னர் சுடலை மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்..

“என் கணவருக்கு ஒரு அப்பாவி அவருக்கு ஒன்னும் தெரியாது அவரை கொலை செய்தவன் ஜாமின்ல விடக்கூடாது இந்த மூணு பிள்ளையை வைத்து நான் என்ன செய்வேன் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தது அருகில் இருந்தவரை கண்ணீரை வரவழைத்தது…

Related News

Latest News