Tuesday, December 23, 2025

கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்று உடலை கிரைண்டரில் அரைத்த கொடூர மனைவி

உத்தரப்பிரதேசத்தில் கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து கொன்று உடலை கிரைண்டரில் அரைத்து அதனை பொட்டலம் காட்டி வீசிய கொடூர மனைவியை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் தனது மனைவி ரூபியுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது ராகுலுக்கு தெரிய வந்த நிலையில் மனைவி ரூபியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபி கள்ளக்காதலன் உதவியுடன் ராகுலை கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி சில பாகங்களை கிரைண்டரில் அரைத்துள்ளார்.

பின்னர் அந்த உடல் பாகங்களைச் சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி தனது கணவர் ராகுலை காணவில்லை என ரூபி புகார் அளித்துள்ளார். விசாரணையின்போது ரூபி முன்னுக்குப் பின் முரணாக பதிலளிப்பதை உணர்ந்த காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கணவர் ராகுலை தனது கள்ளக்காதலுடன் இணைந்து கொலை செய்தததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News