Wednesday, May 21, 2025

27 பேரு மட்டுமே உள்ள தனி நாடு! எங்க இருக்கு தெரியுமா? மிரள வைக்கும் ‘வரலாறு’!

உலகத்தில் மிகச் சிறிய நாடுகளின் பட்டியலில், அனைவருக்கும் தெரிந்தது வாடிகன் நகரம். ஆனா அதுக்கும் சிறியதா இருக்கிற ஒரு “நாடு” இருப்பதைத்தான் பலர் தெரிந்திருக்க மாட்டார்கள்.

இந்த அதிசய நாடு தான் சீலேண்ட் (Sealand). இந்த நாடு ஒரே ஒரு கட்டிடத்தில் தான் செயல்படுகிறது. அதுவும், நடுக் கடலில் ஒரு பழைய ராணுவ கோட்டையை அடிப்படையாக கொண்டு உருவானது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை வெறும் 27 பேர் மட்டுமே.

1967ம் ஆண்டு, இந்த ராணுவ மையத்தை கைப்பற்றிய Major Paddy Roy Bates, இது ஒரு சுயாதீன நாடு என்று அறிவித்து, “பிரின்ஸ் ஆஃப் சீலேண்ட்” என்று தன்னை அழைத்தார். பிறகு, தன்னுடைய குடும்பத்தினருடன் அங்கு குடியேறினார்.

சீலேண்ட் என்பதற்கென தனி கொடி இருக்கிறது, நாட்டுக்கான ரெஜிஸ்டர், முத்திரை, பதக்கம், பாஸ்போர்ட் — எல்லாமே விதிமுறையாக வைத்திருக்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய விசா அனுமதி கோர வேண்டும் என்பதையும் தலையெழுத்தாக பின்பற்றுகிறார்கள்.

அரசாங்கம், பாதுகாப்பு, நிர்வாகம் எல்லாம், Roy Bates குடும்பமே நிர்வகிக்கிறது. அதனால் இது ஒரு குடும்ப அரசாகவே இயங்கி வருகிறது. இந்நாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு பணியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமே.

ஆனால், சுயாதீன நாடாக இவர்கள் தங்களை அறிவித்திருந்தாலும், எந்த சர்வதேச அமைப்பும் இதை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதாவது, இது சர்வதேச சட்டப்படி ஒரு நாடாக கருதப்படுவதில்லை.

இருந்தாலும், ஒரு நாட்டுக்கே தேவையான அடிப்படை அம்சங்களை வைத்திருக்கும் சீலேண்ட், தற்போது வரை இயங்கிக்கொண்டே இருக்கிறது. மிகவும் சிறிய அளவிலே நடந்தாலும், இது ஒரு உலக அதிசயமாக இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news