“இப்படி இன்ப அதிர்ச்சி கொடுத்தா என்ன தான் செய்யறது?” என்று திக்குமுக்காடிப்போய் இருக்கிறார்கள் தங்க நகை பிரியர்கள். ஏனென்றால் வந்திருக்கும் தகவல் அப்படி. கடந்த ஒரு வருடமாகவே ஜெட் வேகத்தில் உயர்ந்துவந்த தங்கம் விலையை பார்த்து “இனிமே கவரிங் நகையை வாங்கி போட்டுக்கவேண்டியது தான் போலிருக்கே” என்று பலர் முடிவே செய்துவிட்டனர்.
தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 8700 கீழ் சரிய போவதாக நிபுணர்கள் கணித்திருப்பது தங்க நகை வாங்க Plan போட்டவர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டிருக்கிறது. ஒரு சில மாதங்களிலேயே ஏறக்குறைய 15 ஆயிரம் ரூபாய் தங்கம் விலை உயர்வு என்பது தேவையில்லாதது என்று கூறப்பட்டாலும் வரும் நாட்களில் தங்கம் விலை அதிரடியாக குறையலாம் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
அதாவது அதிகமாக உயர்ந்த விலை Course Correction என்று சொல்லப்படும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் விலை சமநிலை செய்யப்பட பின்னோக்கி செல்லும். இதைத்தான் விலையில் செய்யப்படும் Course Correction என்பார்கள். அதன்படி தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 8700 கீழ் சரிய போவதாக வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு ஏற்றாற்போல் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் தங்கத்தின் விலை 2500 ரூபாய்க்கு மேல் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க