திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்களுக்கு ‘செக்’! முதல்வர் விஜய்யின் ரகசிய உத்தரவு?

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றி கழக அரசு, தற்போது தனது நிர்வாக ஆக்‌ஷனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அரசுத் துறைகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளை வெளிக்கொண்டு வருவதில் முதல்வர் விஜய் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

“நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை” என்ற முழக்கத்தோடு, ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்தும் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு மிக முக்கியமான மற்றும் ரகசிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால், தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இப்போது ஒருவித கலக்கம் தொற்றிக் கொண்டுள்ளது.

அரசுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ரகசிய உத்தரவில், கடந்த ஐந்து ஆண்டுகால முழுமையான தரவுகளைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாரிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கான செலவுகள், அவசரமாகச் செய்யப்பட்ட பணி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்குப் பின்னால் இருந்த பின்னணி என்ன என்பது குறித்து முதல்வர் விஜய் விளக்கம் கேட்டுள்ளார்.

மேலும், எவ்விதக் காரணமுமின்றி ‘காத்திருப்போர் பட்டியலில்’ வைக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் நிலுவையில் உள்ள துறைசார் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை அல்ல, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை அக்குவேறு ஆணிவேறாக அடையாளம் காணும் ஒரு மெகா பிளான் என்றே அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் டாக்டர் என். மரியா வில்சன், மாநிலத்தின் நிதி நிலை குறித்துப் பல அதிரடியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “தமிழகத்தின் வருவாய் தற்போது சரிவைச் சந்தித்திருப்பதற்கு முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாகமே முக்கியக் காரணம்” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் நிதி விரயங்கள் குறித்து முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார். நிதி நிலை சீரான பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் இன்னும் பன்மடங்கு வேகத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகத் தயாராகி வரும் இந்த ஆய்வு அறிக்கைகள், தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் செய்த தனிநபர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்ற பட்டியல் தற்போது சுடச் சுடத் தயாராகி வருவதால், விரைவில் அதிரடி கைது நடவடிக்கைகள் மற்றும் துறைசார் நடவடிக்கைகள் பாயும் என்பது உறுதியாகியுள்ளது.

தமிழக மக்களின் வரிப்பணம் எங்குச் சென்றது என்பதைத் தெளிவுபடுத்தி, நிர்வாகத்தைச் சீரமைக்க முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கை, வரும் நாட்களில் தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Related News

Latest News