பாமக சார்பில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்’ குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் அவர் பேசியதாவது : சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டை ரத்து, 50% இட ஒதுக்கீடு என குறைத்துத் தீர்ப்பு வழங்க நேரிடும். அப்படி ஒன்று நடந்தால் தமிழ்நாடு என்ன ஆகும்? அடுத்த நாளே ‘தி.மு.க’ ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால் நாங்கள் அதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே கலவர பூமியாக மாறும்.
இந்த ஆபத்தை உணர்ந்து ‘தி.மு.க’ அரசு உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்” என்று ‘தி.மு.க’ அரசை எச்சரித்துப் பேசியிருக்கிறார்.
இனி சும்மா இருக்கமாட்டேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி எச்சரிக்கை#AnbumaniRamadoss #MKStalin #DMKGovt #PMK @arivalayam @CMOTamilnadu @draramadoss @PmkGkm pic.twitter.com/ApQQ8ssGkE
— SathiyamTv (@sathiyamnews) February 10, 2025