Thursday, January 29, 2026

திருநங்கை தற்கொலை செய்த விவகாரத்தில் தவறான தகவல் பரப்பிய மூவர் மீது வழக்குபதிவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே, மக்களிடம் பணம் கேட்டு திருநங்கைகள் தொல்லை கொடுப்பதாக புகார் வந்துள்ளது. இதன்பேரில் விசாரிக்க சென்ற போலீசாரிடம் திருநங்கைகள் வாக்குவாதம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், திருநங்கைகளின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், காவல்நிலையம் வந்து செல்போனை பெற்றுக்கொள்ளும்படி கூறியிருக்கின்றனர். இதன்படி காவல்நிலையம் வந்த திருநங்கை ஒருவர், காவல்நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருநங்கையை போலீசார் தீயிட்டு எரித்து கொன்றதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவியது. இதற்கு தமிழ்நாடு சரிபார்ப்பு இயக்ககம் மறுப்பு தெரிவித்த நிலையில், திருநங்கை தற்கொலை செய்த விவகாரத்தில் தவறான தகவல் பரப்பிய மூவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related News

Latest News