Tuesday, January 27, 2026

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு

டெல்லி விமான நிலையத்தின் டி-1 முனையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கித் திவான் என்ற பயணியை ஏர் இந்தியா விமானி வீரேந்தர் செஜ்வால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அங்கித் திவான், தனது முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

இந்த சம்பவம் குறித்து, விமான போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றிடம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விளக்க அறிக்கை கோரியுள்ளது.

மத்திய அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், ஏர் இந்தியா நிறுவனம் விமானி வீரேந்தர் செஜ்வாலை பணியிடை நீக்கம் செய்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தில்லி விமான நிலைய காவல் நிலையத்தில் விமானி வீரேந்தர் செஜ்வாலுக்கு எதிராக பிஎன்எஸ் சட்டத்தின் 115, 126 மற்றும் 351 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News