அலைகள் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராணி. இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கரூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சீரியல் நடிகை ராணி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
