திருவண்ணாமலை அருகே, செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த காமாட்சி-சஞ்சீவ் தம்பதியனரின் மகன் திருச்செல்வம். பெற்றோர்கள் விளைநிலத்தில் பணியில் இருந்த போது மூன்று வயது சிறுவன் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றுள்ளார்.
அப்போது, தோட்டத்தை ஒட்டியிருந்த, ஆற்று நீரில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக சிறுவன் ஆறு நீரில் அடித்து செல்லப்பட்டான். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.