Saturday, July 5, 2025

மீனவர்கள் வளையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள ராக்கெட் உதிரிபாகம்

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் வினோத் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது. விசைப்படகு ஓட்டுநர் லோகநாதன் தலைமையில் கடந்த 21 ஆம் தேதி அன்று ஆழ்கடலில் மீன் பிடிக்க 6 மீனவர்கள் சென்றனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 23 ஆம் தேதி அன்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் மீன் வலையை இழுத்த போது அதில் 100 கிலோ எடை கொண்ட அலுமினியத்தாலான ராக்கெட் உதிரி பாகம் இருப்பதை பார்த்த மீனவர்கள் அதனை கொண்டு வந்து சென்னை காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் ஒப்படைத்துச் சென்றனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news