தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசின் கடன் சுமையைக் குறைத்து நிதியைச் சேமிப்பது முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நடைமுறையில் ‘ரிவர்ஸ் ஆக்ஷன்’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு, குறைந்த விலை கோரும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரிவர்ஸ் ஆக்ஷன் முறையில், குறைந்த விலையை மேலும் குறைக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பாமாயில் கொள்முதலில் ரூ.12 கோடியும், சர்க்கரை கொள்முதலில் ரூ.6 கோடியும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் சுமார் ரூ.100 கோடி வரை அரசுப் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசின் ஒப்பந்தங்களில் போட்டியை அதிகரித்து, கொள்முதல் செலவுகளைக் குறைக்கும் இந்த முயற்சி மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. கடன் சுமையைக் குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
