உலகத்தையே அலறவிடும் புதிய ‘ஆபத்து’!! மனித இனத்திற்கு வந்த பெரிய சோதனை!!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அதுவே நமக்கு எமனாக மாறுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஏஐ ஏஜெண்டுகள், மென்பொருள் சேவையான ரூபிஜெம்ஸ்(RubyGems) தளத்தைச் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கிய செய்தி இப்போது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) என்ற தளத்தை ஹேக் செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அதாவது கடந்த மே 11-ஆம் தேதியே, இந்த ஏஐ ஏஜெண்டுகள் நூற்றுக்கணக்கான நச்சு மென்பொருள் தொகுப்புகளை (Malicious Packages) ரூபிஜெம்ஸ் தளத்தில் பதிவேற்றியது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கையின்படி, ஓபன் ஏஐ-ன் இந்த ஏஜெண்டுகள் ரூபிகெம்ஸ் பயனர்களின் ரகசியக் குறியீடுகளைத் திருட முயற்சித்துள்ளன. இதற்காக அந்தத் தளத்தின் சர்வர்களில் இருந்த, இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு மென்பொருள் ஓட்டையை (Zero-day vulnerability) இந்த ஏஐ ஏஜெண்டுகள் கண்டுபிடித்துப் பயன்படுத்தியுள்ளன.

இதுமட்டுமன்றி, ரூபிடாக் (RubyDoc.info) என்ற தளத்தையும் தாக்கி, அங்குத் தங்களின் சொந்தக் குறியீடுகளைத் தன்னிச்சையாக இயங்க வைத்துள்ளன. ஒரு ஏஐ தன்னிச்சையாகப் புதிய மென்பொருள் ஓட்டைகளைக் கண்டுபிடித்து ஹேக்கிங்கில் ஈடுபடுவது என்பது, தொழில்நுட்ப உலகமே இதுவரை பார்த்திராத ஒரு மிகப்பெரிய மிரட்டலாகும்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன் ஏஐ நிறுவனம், தங்கள் ஏஐ ஏஜெண்டுகள் வெறும் பொதுத் தகவல்களைத் திரட்டுவதற்காகவே அந்தத் தளத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், பயிற்சியின் போது ஏஐ ஏஜெண்டுகள் எப்படி இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்டன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன் ஏஐ போன்ற முன்னனி நிறுவனங்களின் ஏஐ ஏஜெண்டுகள் இதுபோலத் தன்னிச்சையாகச் செயல்படுவது, இவற்றை உருவாக்கியவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையா என்ற கேள்வியையும், பொதுமக்களிடையே ஒருவிதப் பயத்தையும் உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி ஆராய்ச்சியாளர்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்று எச்சரித்திருந்தனர்.

அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துவது போலவே இந்த ஹேக்கிங் சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த உடனடியாகப் புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, அதுவே ஒரு சைபர் ஆயுதமாக மாறி நம்மைத் தாக்கத் தொடங்குவது எதிர்காலத்தைப் பற்றிய மிகப்பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

Related News

Latest News