‘வாட்ச் விலை 16 கோடி.. பை விலை 25 கோடி!’ அம்பானி வீட்டு மருமகளின் மிரளவைக்கும் சம்பவம்!

அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் அவர் அணியும் ஆபரணங்களின் மீதே குவியும்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் 40-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ராதிகா மெர்ச்சன்ட் கலந்து கொண்ட விதம், இப்போது ஒட்டுமொத்த உலகையே வாய் பிளக்க வைத்துள்ளது.

அவர் அணிந்திருந்த அந்த ஒரு கைக்கடிகாரத்தின் விலையும், அவர் கையில் வைத்திருந்த ஒரு சிறிய பையின் விலையும் மட்டும் சுமார் 5 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி ரூபாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ராதிகா அணிந்திருந்த அந்த ‘படேக் பிலிப்’ (Patek Philippe) கைக்கடிகாரம் மட்டும் 2 மில்லியன் டாலர், அதாவது 16 கோடி ரூபாய் மதிப்புடையது. 18 கேரட் வெள்ளை தங்கத்தில் உருவாக்கப்பட்டு, சுமார் 1,700-க்கும் மேற்பட்ட வைரங்கள் மற்றும் மரகதங்கள் (Emeralds) பதிக்கப்பட்ட இந்த வாட்ச், உலகின் மிக அரிதான கலைப்படைப்புகளில் ஒன்று.

அதற்கு இணையாக அவர் கையில் வைத்திருந்த ‘ஹெர்ம்ஸ் பில்கின்’ (Hermès Birkin) ரகப் பை, வைரங்கள் இழைக்கப்பட்டு சுமார் 3 மில்லியன் டாலர், அதாவது 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு ரகமாகும். ஒரு சிறிய பையின் விலை இவ்வளவு கோடிகளா என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.

ஆனால், இதில் ஒளிந்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், நகை நிபுணர்களின் கருத்துப்படி, இந்த 41 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்சும் பையும் தான் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்ததிலேயே ‘விலை குறைந்த’ பொருட்கள் என்பதுதான்.

ஆமாம், அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த பிரம்மாண்ட மரகத மாலை மற்றும் காதணிகளின் மதிப்பு இதையெல்லாம் விடப் பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. ஒரு மெல்லிய கயிற்றில் அந்த ராட்சத மரகதப் பதக்கம் எப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதே பலருக்கு ஆச்சரியமாக உள்ளது.

“இந்த நகைகளைச் சுமப்பதற்கு ராதிகாவிற்கு ஒரு பாடி பில்டரின் பலம் வேண்டும்” என்று நகை நிபுணரான ஜூலியா சேஃப் (Julia Chafe) என்பவர் கிண்டலாகக் குறிப்பிட்டது வைரலாகி வருகிறது.

நவீன இந்தியக் கைவினைத் திறனைப் பறைசாற்றும் வகையில் பூ வேலைப்பாடுகள் கொண்ட ஆடையை அணிந்திருந்த ராதிகா, தனது மென்மையான மேக்கப் மற்றும் தனித்துவமான ஹேர் ஸ்டைல் மூலம் ஒட்டுமொத்த விழாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

வெறும் ஆடம்பரம் என்று கடந்து போகாமல், பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சங்கமமாகப் பார்க்கப்படும் அவரது இந்த ஃபேஷன் தேர்வுகள், அம்பானி குடும்பத்தின் அசைக்க முடியாத செல்வச் செழிப்பிற்கு ஒரு சான்றாக மாறியுள்ளது.

Related News

Latest News