30.07.2026; மீண்டும் விலை உயர்வு… இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவைக் கண்ட தங்கம், நேற்று கிராமுக்கு ரூ.60 மற்றும் சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனையானது.

அதன்படி, நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.75 அதிகரித்து ரூ.13,230-ஆகவும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், வெள்ளி விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஏற்றம் கண்டாலும், வெள்ளி விலை நிலைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News