தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை… நிபுணர்கள் எச்சரிக்கை…

இந்தியாவில் ஜூன் மாதத்தில் பலவீனமாக இருந்த தென்மேற்கு பருவமழை, ஜூலை மாதத்தில் தீவிரமடைந்ததால் நாட்டின் மொத்த மழைப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூன் 1 முதல் ஜூலை 26 வரை நாடு முழுவதும் 3.372 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதே காலகட்டத்தின் இயல்பான மழையளவு 3.992 செ.மீ. என்பதால், நாட்டின் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் 40 சதவீதமாக இருந்த பற்றாக்குறை தற்போது கணிசமாக குறைந்திருப்பது பருவமழை வலுப்பெற்றதைக் காட்டுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் இயல்பை விட வெறும் 1 சதவீதம் குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.

இருப்பினும், பல மாநிலங்களில் மழைப் பற்றாக்குறை தொடர்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 37 சதவீதம், பீகாரில் 39 சதவீதம், ஜார்கண்டில் 34 சதவீதம் மழைப் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்திலும் 16 சதவீதம் மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

கர்நாடகா, கோவா, அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் இயல்பைவிட குறைவான மழை பெய்துள்ளது.

மறுபுறம், லடாக்கில் 199 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. ஒடிசா, குஜராத், சிக்கிம் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இயல்பைவிட அதிக மழை கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் மழையின் ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என்பதால், விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News