சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 30-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரும்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி வடகடலோர தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில், ஜூலை 30 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரளவு மேகமூட்டத்துடன், சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News